\"Writing.Com
*Magnify*
SPONSORED LINKS
Printed from https://shop.writing.com/main/view_item/item_id/2217417--
Item Icon
\"Reading Printer Friendly Page Tell A Friend
No ratings.
by Nandhu Author IconMail Icon
Rated: E · Article · Holiday · #2217417
விடுமுறை பயணம்
நேரமாச்சு இந்நேரம் போயிருந்த கூட கூட்டத்தில நிக்காம வந்திருப்பேன், இப்படி லேட்டா எழுப்பி விட்டு தொல்ல பன்றியேமா..

ஆமா, உங்கள எத்தன தடவை எழுப்பறது, விடிய விடிய செல்ல நோன்ட வேண்டியது காலைல ஒம்பது மணி வரைக்கும் தூங்க வேண்டியது, அடிக்காதது ஒன்னு தான் கொர..காட்டு கத்து கத்தியாச்சு காதுல விழவே இல்லயோ..??

சரிமா, என்னென்ன வேனும்னு வாட்சப்ல சென்ட் பன்னு சீக்கரம்.

சரிங்க நீங்க மொதல்ல கெளம்புங்க, நீங்க போறதுக்குள்ள வாட்சப் பன்னிடுறேன்.. ஓகே ரைட், ஏங்க அப்றம் அக்கா பசங்கள கொண்டு வந்து விடறதா மச்சான் கால் பன்னிருந்தாரு சோ அவங்களுக்கு ஸ்வீட் ஏதாச்சும் வாங்கிட்டு வாங்களேன்.

அப்டியா..?? எப்ப சொன்னாரு..?? இப்ப இந்த சூழ்நிலைல டவுன்ல இருந்து எப்படி வருவாரு.. ஏன் நீ என்கிட்ட சொல்லல..??

இல்லங்க, நாளைக்கு காலைல 3 மணிக்கெல்லாம் வந்திடுறேனு சொன்னாரு அந்த டைம்ல யாரும் இருக்க மாட்டாங்கனு சொன்னாரு அதான் நானும் வாங்கனு சொல்லிட்டேன்..

ஏன்மா, வெளிய மார்க்கெட் போனாவே அடி வெளு வெளுனு வெளுக்கறாங்க தெரியாதா உனக்கு.. நேத்து பால் வாங்க போனப்பவே என்ன அடிக்க வந்தாங்கனு சொன்னேன்ல.. அவங்க அங்கயே இருக்கட்டும் நான் மச்சான் கிட்ட பேசிக்கிறேன்..

மளிகை கடைக்கு சென்றதும் தேவையான பொருட்களின் லிஸ்ட் வாட்சபில் வந்துவிட்டது, அனைத்தையும் வாங்கி அவசர அவசரமாய் கிளம்பி வீட்டிற்கு வந்து விட்டார்..

இப்போது கால் போகிறது, மச்சானின் மகன் "சித்தப்பா அப்பா மாடில துணி துவைக்கிறாரு, சரி சாமி அப்பாட்ட கொஞ்சம் போன குடு.. இதோ இப்ப தரேன் சித்தப்பா..

தன் அப்பாவிடம் செல்லை கொடுத்தபடி நிற்கிறான். மச்சான் சொல்லுங்க காலைல போன் பன்னேன் நீங்க தூங்கறிங்கனு சொன்னாங்க, அப்றம் நாங்க நாளைக்கு காலைல வரோம் மச்சான்.. சட்டென அவர் இல்லைங்க மச்சான் வேணாம் இந்த டைம்ல நீங்க வந்து மாட்டிக்க வேணாம்..

இங்க யாருமே வெளிய வரது இல்லே, நாங்களும் அத்தியாவசிய தேவைக்குதான் வெளிய போறோம். இங்க கட்டுப்பாடு அதிகம் சிட்டிங்கறதுனால. அதற்கு அவர் பரவாயில்ல நான் கார்லதான் வரப் போறேன் அதுவும் காலைல 3 மணிக்கு யாரு இருக்க போறா சொல்லுங்க..

இல்ல, மச்சான் நீங்க தப்பா நினைக்க வேணாம், நிலைமை சரியாகட்டும் அப்றம் பசங்கள கொண்டு வந்து விடுங்க. இப்ப விட்டிருக்கற லீவு சந்தோசத்துக்கும், கொண்டாட்டத்திற்கும் இல்ல, நம்ம பாதுகாப்பிற்கும், இந்த சமுதாயத்திற்கு நாம செய்ய போற நன்மைக்கும்தான்..

நாமளே கவர்மெண்ட் போட்டுறுக்க தடைய மீறி நடந்து கிட்டா நம்ம பசங்களும் இதே மாதிரி சட்டங்கள மதிக்காம நடந்துப்பாங்க, சோ வேணாம் மச்சான்.. அதுவும் நாளுக்கு நாள் வைரசோட தாக்கம் அதிகரிச்சிட்டே போகுது, நாம இந்த அரசுக்கு செய்ய போற ஒரே சப்போர்ட் வீட்டுக்குள்ள இருக்கிறது மட்டும்தான்..

இப்படி ஒவ்வொருத்தரும் இந்த இக்கட்டான சூழ்நிலைய புரிஞ்சுக்காம அவங்க அவங்க பர்சனல் வேலைகளுக்காக சுத்திகிட்டு இருந்தா இதனோட வீரியம் அதிகரிச்சு நாமளே நம்ம தலையில மண் அள்ளி போட்ட மாதிரி ஆகிடும்..

பசங்களுக்கு போர் அடிக்காம நாமதான் பாத்துக்கனும், வெளிய போகாம நம்ம வீட்டுக்குள்ளயே அவங்கள எப்படி என்டர்டெயின்னா வச்சிக்கறதுனு யோசிங்க.. இவ்ளோ நேரம் நான் எதுக்கு சொல்லிட்டு இருக்கேனு புரிஞ்சுருக்கும்னு நினைக்கிறேன்..

சரிங்க மச்சான் இப்பதான் சீரியசா உணர்ந்தேன், ஓகே எல்லாம் நார்மல் மோடுக்கு வரட்டும் எந்த பயமில்லாம உங்கள வந்து பார்க்கிறேன்.. அதோட இந்த விசயத்த சீரியசா எடுத்துட்டு என் நண்பர்களுக்கும் சொல்றேன்.. தங்கச்சிய கேட்டதா சொல்லுங்க மச்சான். நான் நைட்டு கால் பன்றேன்..

சரிமா, மச்சான் கிட்ட சொல்லியாச்சு, ஏங்க இன்றைக்கும் போலிஸ் அடிக்க வந்தாங்களா..?? அட போலிஸ்கு நம்மள அடிக்கனும்னு எண்ணமில்ல நாட்டு சூழ்நிலைய புரிஞ்சுக்காம வெளிய போய்டு வரமே அது நம்ம தப்பு தானே.. எல்லா போலிஸ்கும், டாக்டர்க்கும், பஞ்சாயத்து துப்பரவு ஆட்களுக்கும் குடும்பம் இருக்குல அவங்க நமக்கு கொரோனா தொற்று வரக்கூடாதுனு தானே இவ்வளோ சிரமத்திலயும் வேலை பார்க்குறாங்க ஆனா நமக்கு சும்மா வீட்ல இருக்கிறதுக்கு நோகுதா போமா போய் வேலைய பாரு..!!

நன்றி..

சிலந்தி..!!
© Copyright 2020 Nandhu (nandhu01 at Writing.Com). All rights reserved.
Writing.Com, its affiliates and syndicates have been granted non-exclusive rights to display this work.
Printed from https://shop.writing.com/main/view_item/item_id/2217417--