No ratings.
இராமாயணம் காவியத்தில் இராவணன் |
இராமாயண கதாபாத்திரம் இராவணன் யாமறிந்த சரித்திரத்தில் தூயவன் இராவணனே! இலங்கேசுவரனே! இலங்கையின் மன்னனே! இப்பூவுலகின் முதல் விமான ஓட்டியே! தசகலையை பத்து தலையாக்கினோமே வரலாற்றிலே!! அனுமன் வாலில் நெருப்பு பட்டு இலங்கையின் ஆட்சியின் அழகு அழிந்ததே! நந்தியின் சாபத்தாலே! நரம்பினால் சாமகானம் இசைத்த வீணைக் கொடியுடைய வேந்தனே! ஈசனையே ஈர்த்தாய் இசைத் திறனாலே நடராஜரையே தாண்டவம் புரிய வைத்தாயே! தவப் பலனால் சந்திரஹாசம் பெற்றவரே! எவருக்கும் என்றும் அஞ்சாத வீரனான அசுரனே! ராமனின் தம்பியால் தம்பியை இழந்தாயே! தசரதனின் புத்திரனால் புத்திரனையும் இழந்தாயே! தம்பி விபீஷணனால் உன்னையே இழந்தாயே! உனது வரமே சாபமாகியதே! இறுதித் தருவாயிலும் வாழ்வில் கற்றதை இலட்சுமணனுக்கு முப்பெரும் உபதேசமாய் அளித்த உன்னதனே! இராவணனுக்கு அஞ்சினர் சுரர்கள் சுரர்களை அடக்கிய அசுரரே! எண்ணிலடங்கா வரம் பெற்றாயே! உனது இழப்பை பரமேசுவரன் அறியாரோ? அறிந்திருந்தால் உனை உயிர்பித்திருப்பாரே? இராமாயணத்தின் சிறந்த பாத்திரமே!!! ஆடலால் ஆட்டம் கண்டது அகிலம் பாடலால் பாருலகை ஆட்டி இசையால் ஈசனை ஈர்த்து கட்டிடம் கலையில் சிறந்து ஜோதிடத்தில் ஜெகத்தில் ஜாலம் செய்து வானியலில் வானளவு உயர்ந்து சித்த மருத்துவத்தில் சித்தர்-ஐ விஞ்சி எவரையும் வெல்லும் போர் கலையும் சமையல் கலையும் சமமாய் இணைந்து மனோதத்துவம் அறிந்த மகான்... இராமனின் தமயன் இலட்சுமணனுக்கு மரணத் தருவாயில் இராவணனின் அறிவுரைகள் எதிர்ப்பவர்க்கும் நன்மை எண்ணிய ஈசனின் பக்தன்... (நல்ல விஷயங்களை தூய மனதுடன் செய்தல் தீர்க்கமான முடிவெடுக்கும் போது பிறர் கூறுவதை கேட்க வேண்டும் உடனிருப்பவர்களை பகைத்துக் கொள்ள கூடாது) ர.மலர்கொடி |